• Sep 30 2023

வாழ்க்கையை பார்த்து பயந்தால் எப்படி நிம்மதியாக வாழ முடியும் - கிழக்கு வாசல் சீரியலின் மூன்றாவது ப்ரோமோ

stella / 1 month ago

Advertisement

Listen News!


நடிகை ராதிகாவின் ராடான் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க விஜய் டிவி முதன்முறையாக ஒரு சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது.கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில் சஞ்சீவ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க இருந்தார்கள். ஆனால் சில நாள் படப்பிடிப்பு செல்ல திடீரென சஞ்சீவ் தொடரில் இருந்து விலகப்பட்டார்.

அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வெங்கட் நாயகனாக நடிக்க கமிட்டானார்.இந்த தொடரின் மூலம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார்.


தத்தெடுத்து வளர்க்கும் பெண் தன்னுடைய உறவினர்களால் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக்காட்டவுள்ளது.இப்படியான நிலையில் இந்த சீரியல் குறித்த மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் கதாநாயகன் கதாநாயகிக்கிடையிலான உரையாடலை எடுத்துக்காட்டுகின்றது என்பதும் குறி்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement