• Sep 26 2023

நீண்ட நாள் கனவு நனவாகிடுச்சு- முதன்முதலாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சத்திரா

stella / 1 month ago

Advertisement

Listen News!


ஷு தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்னும் காரெக்டரில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் நக்சத்திரா. இவர் கடந்த ஆண்டு விஸ்வா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய காதலனை திடீரென திருமணம் செய்ததால் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் கூட வள்ளி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நக்சத்திரா தற்போது அந்த சீரியல் முடிந்த  நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அத்தோடு அண்மையில் இவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது.


இந்த நிலையில் தன்னுடைய பெண் குழந்தையை முதன் முதலாக தொட்டிலில் போட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்தப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.




Advertisement

Advertisement

Advertisement