• Sep 30 2023

பிக்பாஸ் கவின் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் யார் தெரியுமா?- அடடே இவர் தான் காதலியா?- வெளியாகிய போட்டோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் கவின். இதனை அடுத்து சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் எனலாம். இதனை அடுத்து லிப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாகி விட்டார்.


அதிலும் டாடா திரைப்படம் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்து வந்தார். இவர்களின் காதல் தான் அந்த சமயத்தில் ட்ரிண்டிங் நியூஸாக இருந்தது


 ஆனால் வெளியே வந்த பிறகு அவர்கள் யார் என்றே தெரியாதது போல நடந்துகொண்டார்கள். அந்த காதலை பற்றி கேள்வி கேட்டால் கூட தவிர்த்து வந்தார்கள். பின்னர் கவின் ஒரு மேடையில், எனக்கும் லாஸ்லியாவிற்கும் இடையே செட் ஆகாது. நாங்கள் காதலிக்கவில்லை என்று பிரிந்துவிட்டோம் என தெளிவுபடுத்தியிருந்தார். 


தற்போது பிஸியாக படங்களில் நடித்து வரும் கவின், அவரது தோழி மோனிகா என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களின் திருமணம் ஆகஸ்ட் 20ம் தேதி அன்று நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.  


Advertisement

Advertisement

Advertisement