• Sep 27 2023

எத்தனை நாள் நீங்க எனக்கு சேர்டிபிக்கேட் கொடுப்பீங்க, நான் பப்புக்கு போவேன்- கடுப்பாகி பேசிய தொகுப்பாளினி டிடி

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 20 வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்புல்லான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. இவர் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். இது தவிர ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறுசிறு கேரக்டரில் நடித்து வந்த இவர் தற்பொழுது முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இறுதியாக  சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்திலிலும் அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருந்தார் என்பதும் முக்கியமாகும்இவர் சில வருடங்களுக்கு முன்பு தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்ததோடு தற்பொழுது தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.அத்தோடு தனது கெரியரிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். 

அதாவது "பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய என்னுடைய புரிதல் வேறு மாதிரியாக இருந்தது. இப்போது அது மொத்தமாகவே மாறிவிட்டது. திருமணம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம்  செய்தால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.


திருமணம் செய்யாமல் இருப்பதால் எனது வாழ்க்கை குறித்த சர்ட்டிபிகேட்டை யாரும் கொடுக்க வேண்டாம். எனக்கு அது தேவையும் இல்லாதது. எனக்கான சட்டிபிகேட்டை நானே எனக்கு கொடுத்துக்கொள்வேன். என்னைப் பற்றி எனக்குதான் முழுமையாக தெரியும். நான் டீன் ஏஜிலேயே அதாவது 14,15ஆவது வயதிலேயே பப்புகளுக்கு, பார்ட்டிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் எனது அம்மா அனுமதிக்கவில்லை. அதேசமயம் எனது அப்பாவோ தைரியமாக என்னை அனுப்பிவைத்தார். நான் குடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இப்போதுகூட என்னை சுற்றி 100 பேர் குடித்தாலும் நான் குடிக்கமாட்டேன்" என்றும் போல்டாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement