• May 05 2024

ஜெயிலருக்கு போட்டியாக வெளியாகிய போலோ ஷங்கர் திரைப்படம் எப்படி இருக்கு?

stella / 8 months ago

Advertisement

Listen News!


தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் வேதாளம். இப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படம் தான் போலா சங்கர்.மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய நிலையில், முதல் நாளே சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்துக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆந்திராவிலேயே பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் பச்சை நிறத்தில் காட்சியளிப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


அஜித்தின் வேதாளம் படத்தில் இருந்த சில க்ரிஞ்சான காட்சிகளை தூக்கிவிட்டு இந்த படத்தை செய்துள்ளோம் என செம சீன் போட்டு வந்த இயக்குநர் மெஹர் ரமேஷ் போலா சங்கர் படத்தையே க்ரிஞ்சாக எடுத்து வைத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


போலா சங்கர் படத்துக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் போனோம்.. ஆனால், படம் அதை விட மோசமாக இருக்கிறது என மெகா ஸ்டார் ரசிகர்களே இயக்குநரை கழுவி ஊற்றி வருகின்றனர். வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடலும் அஜித்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸும் அதிர வைத்தது. 


ஆனால், சிரஞ்சீவி என்ன தான் படத்தை காப்பாற்ற முடிந்தாலும், இயக்குநரின் சொதப்பலான மேக்கிங்கால் படம் பார்க்கவே முடியவில்லை என கலாய்த்து வருகின்றனர்.அத்தோடு போலா சங்கரில் ஹீரோயினாக நடித்த நிலையிலும் தமன்னாவுக்கு ஸ்கோப் இல்லை என்றும் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement