• Sep 17 2024

RJ பாலாஜி நடித்துள்ள வீட்ல விசேஷம் பட ட்ரைலர் வெளியானது..இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பதாய் ஹோ. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அந்த படத்திற்கு வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ளதோடு என்.ஜே.சரவணனுடன் இணைந்து நடிகர், இயக்குநர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முக திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார்.

மேலும் சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், 'வீட்ல விசேஷம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் இன்று நடைபெறும் லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான பிளே ஆப் போட்டியின் இடையில் வெளியிடப்படும் என ஆர்.ஜே.பாலாஜி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் ரிலீசாகியுள்ளது.

இதோ அந்த படத்தின் ட்ரைலர்...

Advertisement

Advertisement