• May 04 2024

விஷால், எஸ்.ஜே.சூர்யா மிரட்டும்... 'மார்க் ஆண்டனி' திரைவிமர்சனம் இதோ...!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதோடு வினாத்குமார் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தில் விஷாலுடன்  எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அத்தோடு இயக்குநர் செல்வராகவனும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படமானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. எனவே இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

மார்க் ஆண்டனி படத்தைப் பொறுத்தவரையில் விஷால், எஸ். ஜே. சூர்யா ஆகிய இருவரை சுற்றி தான் முழுக்கதையும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையில் விஷால் தன் அம்மாவை கொன்றது அப்பா தான் எனவும், அவர் ரொம்பவும் மோசமானவர் எனவும் நினைத்து சிறுவயதிலிருந்தே அவரை வெறுத்து வருகின்றார்.

இதன் காரணமாக எஸ் ஜே சூர்யாவை தன் அப்பாவாக நினைத்து விஷால் வாழ்ந்து வருகின்றார். அந்த சமயத்தில் சயின்ட்டிஸ்ட் செல்வராகவன் (சிரஞ்சீவி) உருவாக்கிய ஒரு டைம் மெஷின் டெலிபோன் விஷால் கையில் கிடைக்கின்றது. அதை வைத்து இறந்த காலத்திற்கு சென்ற விஷால் அதன் மூலம் தன்னுடைய அப்பா மிகவும் நல்லவர் என்றும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) தான் அவரை கொன்று அவரை பற்றி சமுதாயத்தில் தவறான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறான் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்கின்றார்.

இதனையடுத்து அவரின் வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பதனை மையமாகக் கொண்டு படத்தினுடைய மீதிக்கதை அமைந்துள்ளது. 


பலம் 

விஷாலின் மிரட்டலான நடிப்பு நுனி சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்க வைக்கின்றது.

ரசிகர்கள் வாயைப் பிளந்து பார்க்கும் அளவிற்கு எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு அமோகமாக இருக்கின்றது.

அத்தோடு கொஞ்சம் சயின்ஸ், ஏராளமான காமெடி எனக் கலந்து இயக்குநர் திரைக்கதையை விறுவிறுப்பாகவும், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் கச்சிதமாக உருவாக்கியுள்ளார்.

அதேபோன்று ரிது வர்மா, சுனில், செல்வராகவன் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர். 

ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை ரசிகர்களை மெய் மறந்து ரசிக்க வைக்கின்றது.


பலவீனம் 

முதல் பாதி சற்றுத் தொய்வுடையதாக நகர்ந்து செல்கின்றது.

விஷாலின் டப்பிங் சில இடங்களில் ரசிகர்களை பொறுமையிழக்கச் செய்து எரிச்சலை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

இப்படத்தில் செல்வராகவனுக்கு பெரிதாக வேலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 


தொகுப்பு 

மார்க் ஆண்டனி சில இடங்களில் எரிச்சலைத் தூண்டினாலும் மொத்தத்தில் ரசிக்கக்கூடிய ஒரு படமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement