• May 04 2024

100குடும்பங்களுக்கு தலா 1லட்சம்... சொன்னதை செய்து முடித்த விஜய் தேவரகொண்டா... குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் தான் குஷி. இப்படத்தினை இயக்குந் ஷஜவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.


இந்த படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்க அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில், விஜய் தேவர் கொண்டா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான காதல் கதயம்சத்தைக் கொண்ட இந்தப் படமானது இளைஞர், யுவதிகளை அதிகம் கவர்ந்துள்ளது.


இதனால் இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அதிகளவில் பெற்றுள்ளது. இதனையடுத்து வசூலும் எகிறியுள்ளது. அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் நடிகர் விஜய் தேவரகொண்டா இப்படத்திற்காக தான் பெறும் சம்பளத்திலிருந்து 1கோடியை 100 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமாக பிரித்து வழங்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.


இன்றைய தினம் இதனையடுத்து தான் சொன்னபடி spreading kushi to 100 families என்ற பெயரில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா குறித்த பணத்தை அந்தக் குடும்பங்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளார். இதனையடுத்து இவரின் மனிதாபிமானத்தை பாராட்டி பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement