• Sep 25 2023

அடுத்த ஆதி குணசேகரன் இவர்தான்... வெளியானது கிட்டத்தட்ட உறுதியான தகவல்... அடடே இதை நாம எதிர்பார்க்கலயே..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. கதை மட்டுமன்றி கதாபாத்திரங்களின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.


அந்தவகையில் இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான ஸ்மார்ட்டான கதாபாத்திரம் தான் ஆதி குணசேகரன். இந்தக் கதாபாத்திரத்தில் இதுவரை காலமும் நடிகர் மாரிமுத்து நடித்து வந்திருந்தார். அந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ட்ரெண்ட் ஆகின. அதிலும் குறிப்பாக இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியது.


இந்நிலையில் இவரின் திடீர் உயிரிழப்பானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து 'எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதிகுணசேகரனாக யார் நடிக்கப் போகிறார் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்தவகையில் குறித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது. ஆனால் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால், 'எதிர்நீச்சல்' தொடரில் நடிப்பது மிகவும் கஷ்டம் என்பது போல்  வெளிப்படையாக கூறி இருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து சீரியல் குழுமத்தினர் நடிகர் ராதா ரவி, நடிகர் பசுபதி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்திருந்தனர். இதில் கிட்ட தட்ட பசுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement