• Apr 23 2026

வரலட்சுமியின் Bag-ஐ விற்றாலே படம் எடுக்கலாம்... கணவர் நிக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அவரது கணவர் நிக் குறித்து சமீபத்தில் வெளியான ஒரு பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் நிக் பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களிடையே சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, "ஒரு வேளை நான் படம் எடுக்கணும், எனக்கு பைனான்ஸ் கிடைக்கலன்னா வரலக்ஷ்மி வச்சி இருக்க பாதி BAG வித்தாலே பாகுபலி 3 எடுக்கலாம். அந்த அளவுக்கு அவங்க கிட்ட BAG இருக்கு, எனக்கு தெரிஞ்சி ஒரு 9000 BAG வச்சி இருப்பாங்க. என் வாழ்க்கையில் இருக்கும் பெண்களை நான் மிகவும் நேசிக்கிறேன். 


என் அம்மா, மனைவி ஏதாவது ஒரு பொருள் கேட்டால் நான் 3 பொருள் வாங்கி தருவேன். எதுக்கு நாம வேலை செய்றோம், எதுக்கு சம்பாதிக்கிறோம், நமக்கு புடிச்சவங்களுக்கு செலவு பண்ண தான்.” என்ற அவரது கூற்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த கருத்து ரசிகர்களிடையே வேகமாக பரவி, மீம்களாகவும் மாறி வருகிறது.

இந்த கருத்துகள் சிலருக்கு நகைச்சுவையாக இருந்தாலும், பலர் அதை அன்பின் வெளிப்பாடாகவே பார்க்கின்றனர். வரலக்ஷ்மி கணவர் நிக் பகிர்ந்த இந்த சுவாரஸ்யமான உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement