• Sep 25 2023

இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை... சூப்பராக கொண்டாடிய 'Game Changer' படக்குழு... வெளிவந்த வீடியோ இதோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1990-களில் அறிமுகமாகி மிகப்பெரிய உயரத்தை அடைந்திருப்பவரும் இந்திய சினிமாவின் மிக வெற்றிகரமான திரைப் படைப்பாளிகளில் ஒருவருமாகத் திகழ்ந்து வருபவர் இயக்குநர் ஷங்கர். இவர் விரல் விட்டு என்னும் அளவிலான படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் அவை பெரும்பாலும் மிகப்பெரிய வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன.


அந்தவகையில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் 'RC 15' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். 


இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அத்தோடு படத்துக்கு ‘கேம் சேஞ்சர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஷங்கர் இன்று (ஆகஸ்ட் 17) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை 'கேம் சேஞ்சர்' படக்குழுவினர் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள்,  வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement