• Sep 26 2023

'ஜெயிலர்' திரைப்படம் எப்படி இருக்கு..? ரஜினி முன்வைத்த சூப்பரான பதில் இதோ...!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து  எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் தான் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாளை வெளியாக உள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மேலும் இப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உண்டு.

இந்நிலையில் ரஜினி தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். இவர் எப்போதெல்லாம் ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பு இமயமலைக்கு செல்கின்றாரோ அந்த சமயத்தில் வெளியாகும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், எனவே ஜெயிலர் திரைப்படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.


இதனையடுத்து இமயமலைக்கு சென்ற ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கு என கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி பதிலளிக்கையில் "நீங்கள் தான் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். ரசிகர்கள் தான் ஜெயிலர் எப்படி இருக்கு என சொல்லவேண்டும்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement