• Feb 04 2023

வசூலை வாரிக் குவிக்கும் வாரிசு-ஐக்கிய ராஜ்யத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

Listen News!
stella / 1 week ago
image

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த வாரம் (11.01.2023) முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது.மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள.


இந்நிலையில் ஐக்கிய ராஜ்யத்தில் வாரிசு படம், இதுவரை 835K ஐரோக்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அஹிம்சா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7.41 கோடி ரூபாயை வாரிசு படம் ஐக்கிய ராஜ்யத்தில் வசூலித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement