2019ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பரத் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மீண்டும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அஜய் கார்த்திக், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பட வெளியீட்டை முன்னிட்டு அளித்த சமீபத்திய பேட்டியில், தனது திரையுலகப் பயணம் குறித்து பரத் மனம் திறந்து பேசியுள்ளார். “எதுவுமே செய்யாதவர்களே எங்கேயோ உயர்ந்து சென்றுவிட்டார்கள் என்று சிலர் என்னிடம் கூறும் போது அது எனக்கு மனவேதனையை தருகிறது.” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாததற்கான காரணமாக தான் தேர்வு செய்த கதைகளில் ஏற்பட்ட தவறுகளை அவர் நேர்மையாக ஒப்புக் கொண்டார். “ரசிகர்கள் என் படங்களை பார்க்காமல் போனதற்கு நான் எடுத்த கதைத்தேர்வுகளே முக்கிய காரணம்.” என்றார்.
இதைத் தொடர்ந்து, “நான் இன்னும் இந்த போட்டியில் இருக்கிறேன். ஒருநாள் சஞ்சு சாம்சன் போல ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் உயர்ந்த நிலையை அடைவேன்.” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இந்த உருக்கமான மற்றும் நேர்மையான கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, அவரது மறுபிரவேசத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
Listen News!