• Apr 01 2023

அப்பா நல்லது சொய்ததால் தான் தள்ளப்பட்டு இருந்திருக்காரு- மயில்சாமி மகன் உருக்கம்..

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக விளங்கி இருந்த மயில்சாமி, சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் கடும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில், மயில்சாமியின் மகன் யுவன்,பிரபல சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தந்தை மயில்சாமி குறித்து பல்வேறு கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.


அப்போது, அப்பகுதியில் செல்லபிள்ளையாக மயில்சாமி இருந்தது பற்றி பேசிய மகன் யுவன், "காலையில, 5 : 30 மணிக்கு எல்லாம் வீட்டை விட்டு வெளிய போவாரு. தூங்குறதுக்கு மட்டும் தான் இங்க வருவாரு. வேலைன்னா வேலைக்கு போனும். வேலை இல்லன்னா வேலையை தேடி போணும். அப்படித்தான் அப்பா எப்பவும் இருப்பாரு. காலையில எந்திரிச்சதும் இந்த ஏரியா ஃபுல்லா அப்படி நடந்தே போவாரு. நடிகர் என்பது  எல்லாம் இருக்காது.

நான் பிறந்து எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ, அதே எனர்ஜியோட தான் கடைசி நாள் வரைக்கும் பார்த்தேன். முடியல, உடம்பு சரியில்லன்னு எல்லாம் இல்ல. கடைசி நாள் வரைக்கும் ஓடிட்டே தான் இருந்தாரு. கடைசி நாள் வரைக்கும் வேலைக்கு போயிட்டு, டப்பிங் முடிச்சிட்டு நைட்டு கோவிலுக்கு போயிட்டு ஒரு கால் மணிநேரத்துல தான் நடந்தது.


காலையில் எந்திரிச்சு அப்படியே அங்க டீக்கடை, கறிக்கடை, மளிகைக்கடை எல்லாம் இருக்கு. அவங்க எல்லாருமே அப்பாவுக்கு ஃபிரெண்ட்ஸ் தான். மத்தவங்க எல்லாருக்கும் என்ன தேவையோ அதை அப்பா அங்க இருந்து வாங்கிக் குடுத்து அவங்க ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. அதுல என்னன்னா அப்பா நல்லது பண்றதுனால அந்த கடைகள்ல இருக்குறவங்களும் அப்புறம் பணம் வாங்காம நல்லது பண்றாங்க. அப்பா இவ்ளோ நல்லது செய்யுறாருன்னா, அதுக்காக அவரு தள்ளப்பட்டு இருக்காருன்னு தான் நான் நினைக்குறேன். அவருக்கு அமைஞ்ச ஃப்ரெண்ட்ஸ் அப்படி" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement