நடிகர் விஜய் தொடர்பான வருமான வரி வழக்கு விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக அரசியல் மேடைகளில் ஊழல் குறித்து கடுமையாக பேசிவரும் விஜயை, இந்த விவகாரத்தை முன்வைத்து ப்ளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது ப்ளூசட்டை மாறன் தனது பதிவில்,“ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன். ஒரு ரூபாய் கூட திருடமாட்டேன் என சில நாட்களுக்கு முன்பு தான் மேடையில் பஞ்ச் டயலாக் பேசினார். இதோ 15 கோடி ரூபாவை கணக்கில் காட்டாமல் மறைச்சதுக்கு 1.5 கோடி அபராதம் என தீர்ப்பு வந்துள்ளது. வெட்கக்கேடு.” என்று நடிகர் விஜயை நேரடியாக சீண்டியுள்ளார்.
இந்த கருத்து அரசியல் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் தொடர்பான வருமான விவகாரமே தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அந்த படத்தில் நடித்ததற்காக விஜய் ரூ.15 கோடியை சம்பளமாக பெற்று வருமான வரி கணக்கை முறையாக காட்டவில்லை என்ற வழக்கு தொடர்பாக, நேற்றைய தினம் நீதிமன்றம் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீர்ப்பு வெளியான உடனே, சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, விஜயின் சமீபத்திய அரசியல் பேச்சுகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு கருத்துக்களை இந்த விவகாரத்துடன் இணைத்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Listen News!