• May 18 2024

குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கிக்கு கெட்டப் செலக்ட் பண்ணி கொடுப்பது இவர் தனாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.

பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார் என்றாலும் , இவருக்கு அதிக அளவிலான பிரபலத்தை ஏற்படுத்திக்கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

This image has an empty alt attribute; its file name is 0397254c-shivanki7.cinesamugam.jpg

மேலும் அந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை நிறைவடைந்ததை அடுத்து தற்போது மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகின்றது.அதிலும் சிவாங்கி கோமாளியாக அசத்தி வருகிறார்.

அது மட்டுமலாமல் ஆல்பம் பாடல்கள் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது , சினிமாவில் பாடல்கள் பாடுவது என படுபிஸியாக இருக்கிறார் சிவாங்கி.தற்போது கூட சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் இவர் பேசிய விடயம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.அது என்னவென்றால் குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி என்ன கெட்டப் போட்டாலும் பொருந்தி விடும்.

இந்நிலையில் உங்களுக்கு அந்த கெட்டப் செலக்ட் பண்ணி கொடுப்பது யார் என கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் சிவாங்கி.அதாவது அவ் நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்தீபனாம் என்று அவரே கூறியுள்ளார்.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement