• Jun 07 2026

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தார்.! விஜய் மீது அடுத்தடுத்து பாய்ந்த புகார்கள்?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்றைய தினம் சென்னையில் உள்ள மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி பெரம்பூர், கொளத்தூர் ஆகியவற்றில் பிரச்சாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்ய முடியாமல் ரத்து செய்துவிட்டு கிளம்பியுள்ளார்.

பெரம்பூரில் தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூருக்கு விஜய் செல்ல சுமார் மூன்று மணி நேரமாகியுள்ளது. மேலும் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க சீக்கிரம் பேசி முடிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனால் விஜய் அங்கு வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டும் பேசி முடித்துள்ளதோடு, தங்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு தவெக சார்பில் புகார் ஒன்றை கொடுத்துவிட்டு வில்லிவாக்கம் பிரச்சாரத்தை ரத்து செய்து சென்றுள்ளார்.


இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூரில் 5 ஒலிப்பெருக்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்த நிலையில் 30 ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பரப்புரை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பரப்புரையின்போது போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் தேர்தல் விதிகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement