• May 18 2024

அதர்வா பட இயக்குநரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு இப்படத்தின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு படத்தை கண்டுகளித்தார். படத்தை பார்த்த பின் படத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்தார்.இயக்குநர் ஶ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த படத்தில் கபடி வீரராகவும், நடிகர் அஜித்தின் ரசிகராகவும் அதர்வா நடித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு, இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆகஸ்ட் - 5 ஆம் நாள் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement