• May 18 2024

குருதி ஆட்டம் படத்தின் ஸ்னாக் பீஃக் ரிலீஸ்- அதர்வா செமையாத் தான் மாஸ் காட்டி இருக்கின்றார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் குருதி ஆட்டம். இப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சி துணுக்கு மட்டும் இன்று வெளியிடப்பட்டது. அதில் அதர்வாவின் மாஸ் காட்சி இடம் பெற்றுள்ளது.

மொஹரம் பண்டிகையின் பின்னணியில் இந்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் கபடி வீரராகவும், நடிகர் அஜித்தின் ரசிகராகவும் அதர்வா நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் - 5 ஆம் நாள் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement