• May 09 2024

நடிகர் வடிவேலுவின் சொந்த தம்பியை பார்த்துள்ளீர்களா.. வெளியானது புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் எனப் பன்முகத்திறமை கொண்ட ஒருவரே வடிவேலு. இவர் 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய 'என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு முதன்முதலாக அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படங்களிலும் வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறார். 

இவர் குறிப்பாக 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்து வருகின்றார். அதுமட்டுமல்லாது காமெடி படங்களில் கதாநாயகனாகவும் முத்திரை பதித்துள்ளார்.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வடிவேலு நகைச்சுவைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் இவரின் மீம்ஸ்கள் தான் அதிகளவில் கொட்டி கிடக்கின்றன. 

இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளிவந்தது.எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. வடிவேலுவின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் மாமன்னன்.

இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.மேலும் இவருடைய பெயர் ஜெகதீசன் என்றும், இவர் காதல் அழிவதில்லை படத்தில் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..






Advertisement

Advertisement

Advertisement