• May 10 2024

நடிகர் ஜுவாவின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- முதன்முறையாக வெளியான போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் ஜுவா. ஏராளமான இளம் ரசிகைகளைக் கவர்ந்த இவர் இறுதியாக சுந்தர்சி. இயக்கத்தில் வெளியான காஃப்பி வித் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவருடைய அப்பாவான ஆர்.பி சௌத்ரி அவர்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர்கள் தயாரிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.


சௌத்ரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்கள் இருவருமே சினிமாவில் நுழைந்து நாயகனாக நடித்துள்ளார்கள்.ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் இதில் ஜீவா நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் ரமேஷிற்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் வரவில்லை.


ஜித்தன் ரமேஷ் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்கு விளையாடி இருந்தார்.ஜீவா மற்றும் ரமேஷின் அப்பாவை தெரியும், ஆனால் அவரது அம்மாவை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை.ஜித்தன் ரமேஷ் ஒரு விஜய் டிவி நிகழ்ச்சியின் போது தனது அம்மாவை முதன்முறையாக வெளிக்காட்டினார். அந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement