• May 03 2024

லியோ படத்தின் வெறித்தனமான அப்டேட்டை வெளியிட்ட அனிருத்.. வைரலாகும் வீடியோ.. குஷியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது 'லியோ' படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் வாயிலாக விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து திரிஷா நடித்து வருகிறார். 


அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை லலித் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.


இப்படத்தின் உடைய ஷூட்டிங் ஆனது கடந்த மாதம் சென்னையில் ஆரம்பமானது. இதனையடுத்து பின்னர் மூணாறில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாத இறுதியில் விஜய், திரிஷா உட்பட ஒட்டு மொத்த படக்குழுவினரும் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர். 


மேலும் ஷூட்டிங்காக காஷ்மீர் சென்ற 3 நாட்களில் திரிஷா மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டதாகவும், லியோ படத்திலிருந்து வெளியேறி விட்டதாகவும் கூறி ஒரு சில செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தன.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து லியோ படத்தின் உடைய படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையில் லியோ பட டைட்டில் ரிலீசுக்காக வெளியிடப்பட்ட ஸ்பெஷல் ப்ரமோ வீடியோவில் அனிருத்தின் உடைய பாடல் ஒன்று ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. இதனால் அந்தப் பாடலை தனிப் பாடலாக வெளியிடுமாறு அனிருத்துக்கு ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்நிலையில் தற்போது இந்தப் பாடல் உருவான விதத்தை வீடியோவாக அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் வீடியோவிற்கு கீழே 'லியோ' படத்தில் அனிருத்தின் வேறலெவல் சம்பவம் இருக்கும் என்றும் ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது 'லியோ' படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement