• Jan 19 2025

பாக்கியலட்சுமி சீரியலில் இனி இவருக்கு பதில் இவர் தானாம்! முக்கிய நடிகர் மாற்றம்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இதற்கு பெருமளவான ரசிகர்கள் காணப்படுவதோடு இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடராகவும் பாக்கியலட்சுமி சீரியல் காணப்படுகின்றது.


பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்ணாக காட்டப்படும் பாக்கியா, அவர் யாரையும் எதிர்பார்க்காமல் குடும்பத்திற்காக உழைப்பதையும், பிள்ளைகள் மீது கொண்ட அளவு கடந்த அன்பையும், ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக இருந்து மெல்லமெல்ல தொழிலதிபராக நினைத்து நகரும் சிறந்த கதாபாத்திரமாக காணப்படுகிறார். 


பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெனியின் அப்பாவாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் கதாநாயகர்களின் அப்பாவாக நடித்தவர் தான் தற்போது ஜெனியின் அப்பாவாக நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement