தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாகவும், உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சமீபத்தில் 'விக்ரம்' என்ற படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இன்றுவரை விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் ஒரு சில படங்களைத்தான் இயக்கி இருக்கின்றார். இருப்பினும் 'விக்ரம்' படம் இவரின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றி இருக்கின்றது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் தமது வாழ்த்து மழையை பொழிந்து வந்தனர். அத்தோடு இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததோடு மிகப்பெரியளவிலான வசூல் வேட்டையையும் நடத்தி வருகின்றது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ஆனது ரூ. 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் மட்டுமே தயாரானது. ஆனால் இப்படம் செய்த வசூலோ யாருமே எதிர்பார்க்காத வகையில் டபுள் மடங்கு அதிகம் எனக் கூறலாம்.
இந்தநிலையில் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 442 கோடி வரை 'விக்ரம்' படம் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எந்த நடிகரின் படமாக இருந்தாலும் ரசிகர்கள் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் என்று பார்த்தாலும் சென்னையில் மட்டும் எவ்வளவு என முக்கியமாகப் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் கமல்ஹாசனின் விக்ரம் படம் சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 17 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.
இதைக் கேள்விப்பட்ட நம்ம உலக நாயகன் ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா, அப்பிடியே ஆனந்த வெள்ளத்தில மிதந்திற்று இருக்காங்க.
பிற செய்திகள்
- ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் இத்தனை கோடியா?..வாயைப் பிளந்த ரசிகர்கள்
- விஜய்யின் நான் வாழும் உலகம்; பேரைக் கேட்டாலே ரொம்ப வித்தியாசமாய் இருக்கே!
- கனவுத் தொழிற்சாலையின் ரசிகர்களால் மறக்க முடியாத கனவுக் கன்னி..சிலுக்கு ஸ்மிதா
- நான் படிக்காததால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன்; ரசிகர்களுக்காக மனம் திறந்த அஜித்
- அஜித், சூர்யாவை விட என்னுடைய முதல் தேர்வு விஜய் சேதுபதி தான்; இயக்குநர் ஷங்கர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!