• Jul 01 2024

பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட்ரி… வேண்டுகோள் விடுத்த மாதவன்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஜூன் 1ந் தேதி பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியது தான் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இப்படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்துள்ளார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. இப்படத்தில் 80 வயதான நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளதோடு இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.முன்னதாக கேன்ஸ் விழாவில் திருடப்பட்ட பின்னர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே இந்த படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மேலும் இந்த படத்தை எழுதியும் தயாரித்துள்ள மாதவன் தான் இதில் விஞ்ஞானியாக நடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம் தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என பன்மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன், பின்னர் உண்மை தெரிந்த பின்னர் விடுதலையானார்.

இதற்கிடையே விஞ்ஞாணி மற்றும் அவரது குடும்பம் சந்தித்த இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் விஞ்ஞானி நம்பினாராயணன் கொடுத்துள்ளார். இதில் சிம்ரன், ரவி ராகவேந்திரா, நிஷா கோஷல் மற்றும் பலர் நடித்துள்ளனர். அதோடு சூர்யா, ஷாருக்கான் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் திரையரங்கு ஒன்றில் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் கொல்கத்தாவில் இந்த படம் திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டடு உள்ளது. படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை. அதனால் மனமுடைந்த சில ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் திடீரென காரணத்தைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு தங்கள் டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கேட்டனர். தியேட்டர் நிர்வாகத்துடன் ரசிகர்கள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இந்த வீடியோவுக்கு பதில் அளித்த மாதவன் ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் , ஒரு உண்மையான காரணமும் இருந்திருக்க வேண்டும். தயவு செய்து அமைதியாக இருங்கள் மற்றும் கொஞ்சம் அன்பை காட்டுங்கள். பணிவான வேண்டுகோள். நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement