• Apr 26 2024

திருமணத்திற்கு பின் தனது காதல் மனைவியுடன் ஹரிஸ் கல்யாண் நடத்திய போட்டோ ஷுட்- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இதன் பின்னர் அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தா மாமா உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.


இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே கூற வேண்டும்.வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்ததோடு அதில் சிறப்பாக விளையாடி தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.இதன் பின்னர் படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தது.


இதன் பின்னர் பியார் பிரேம காதல் தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசடதபற , ஓ மண பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து தனது பேன்ஸ் பேஸை அதிகரித்துக் கொண்டார்.இது தவிர இவரது நடிப்பில் தற்பொழுது 100 கோடி வானவில், நட்சத்திரம், டீசல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றது.


இந்த நிலையில் இவர் நேற்றைய தினம் நர்மதா உதயகுமார் என்கிற பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இவரது திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவர்களது திருமணப் புகைப்படமும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.


இதை தொடர்ந்து ரிசப்ஷன் மற்றும் தற்போது திருமண போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள இந்த தம்பதியினரின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறதைக் காணலாம்.






Advertisement

Advertisement

Advertisement