• Mar 29 2024

வாத்தி’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்- ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் ட்ரீட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் இறுதியாக நானே வருவேன்’ என்னும் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகியிருந்தது.இப்படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த ளெவுக்க வெற்றி பெறவில்லை என்பதும் முக்கியமாகும்.

இதனை அடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இந்த படம் ‘சார்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது.


 இந்தப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தனுஷுக்கு ஜோடியாக வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். 

இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும், காதல் பாடலாக வாத்தி படத்தின் முதல் பாடல் வெளிவரும் என்றும் ஜி.வி. பிரகாஷ் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் செம குஷியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement