• May 05 2024

பிறந்தநாள் ஸ்பெஷலாக... மகன்களின் முகங்களை தெட்டத் தெளிவாக காட்டிய விக்கி... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தனது காதலன் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் ஷாருக்கான் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனை அடுத்து அதே ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்திருந்தனர். பல சர்ச்சைகளின் பின்னர் இந்த குழந்தை விவகாரம் முடிவுக்கு வந்தது. அத்தோடு குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.


மேலும் தமது குழந்தைகளுக்கு உயிர், உலக் எனப் பெயரிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்தம்பதியின் மகன்களின் உடைய முதலாவது பிறந்தநாள் ஆகும். இதனை முன்னிட்டு மகன்களின் முகங்களை தெளிவாக காட்டும் புகைப்படங்களை பதிவிட்டு உணர்ச்சி பூர்வமான வரிகளின் மூலமாக வாழ்த்துத் தெரிவித்து இருக்கின்றார்.


அதில் "இந்த வரிகளையும் எங்கள் படங்களையும் ஒன்றாக இடுகையிட நீண்ட நேரம் காத்திருந்தேன், இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் அருமை மகன்கள் உயிர் ருத்ரநீல் & உலாக் டைவிக், அப்பாவும் அம்மாவும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நேசிக்கிறார்கள், 


எங்கள் வாழ்க்கையில் வந்து அதை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றியதற்கு நன்றி, நீங்கள் அனைத்து நேர்மறை மற்றும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்துள்ளீர்கள், நீரே எங்கள் உலகம் & எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை" எனக் குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement