• May 08 2024

நீங்கள் எங்கள் பொக்கிஷம், கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக திரைப்படங்களை இயக்கக் கூடிய இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத் தற்பொழுது உருவாகி வருகின்றது.இந்தியன் 2' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க,   காஜல் அகர்வால் , ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திர கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயப்ரகாஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.


மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், ராட்சத கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து, கமலுக்கு ஏற்பட்ட மேக்கப் அலர்ஜி போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது எவ்வித தங்கு தடையும் இன்று நடந்து வருகிறது. கூடிய விரைவில் படத்தின் பணிகள் நிறைவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய, 68 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு இந்தியன் 2 சார்பில்... மிரட்டலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இயக்குநர் ஷங்கர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவில், 'நீங்கள் எங்கள் பொக்கிஷம், பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்'.


Advertisement

Advertisement

Advertisement