• May 08 2024

'தங்கச்சிக்காக பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்''- திருமண விழாவில் கெத்தாகப் பேசிய விஷால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வலம் வரும் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் விஷால். இவரது நடிப்பில் தற்பொழுது லத்தி என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சுனைனா நடித்துள்ளதோடு இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் அண்மையில் தான் முடிவடைந்தது.

இந்த நிலையில் விஷால் நேற்றைய தினம் தனியார் பள்ளி மைதானத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் திருமணம் செய்து வைத்தார். 11 ஏழை ஜோடிகளும் ஏற்கனவே காதல் செய்து வந்துள்ளனர். அதற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளிக்காததால் தனது நற்பணி மன்றம் மூலம் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து, மேடையில் பேசிய நடிகர் விஷால், “எனக்கு குடும்பம் பெரிதாகிவிட்டது. 11 தங்கைகள் கிடைத்துள்ளனர். என் தங்கைகளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என் வேட்டியை மடித்து கட்ட வெச்சிராதிங்க மாப்பிள்ளைகளா. சும்மா இருக்க மாட்டேன்” என அன்பு கட்டளையிட்டார்.

மேலும், “திருமணம் முடிந்ததோடு விட்டுவிட மாட்டேன், தொடர்ந்து கண்காணித்துகொண்டு இருப்பேன். உங்க பிள்ளைகளின் எதிர்காலத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்.


நல்ல விஷயம் செய்ய. இதே மனநிலையில் இருப்பவர்கள் என்னோடு ஒன்றிணைய வேண்டும். படம் நடித்து அதில் வரும் பணத்தை வைத்து நூறு குழந்தைகளை படிக்க வைக்க உதவும்.ஒற்றை வார்த்தையில் நிற்க வேண்டும். லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா தீர்ப்பு வரும். நடிகர் சங்க கட்டிடம் முடிந்ததும் பட்டு சேலை வழங்கப்படும். 3500 குடும்பங்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பிறகு நடைபெறும். வலி மறுத்து போய்விட்டது. நான் எதை செய்தாலும் அதை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

அதை பொருட்படுத்தாமல் செல்கிறேன். ஒஸ்தியான காரில் வரும் பெண்கள் படிக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும் என ஏழை தங்கை ஒருவர் கேட்டார். அதற்காக பிச்சை எடுப்பதற்கு யோசிக்கவோ, தயங்கவோ மாட்டேன். தங்கைக்கு பிச்சை எடுக்க தயங்கவில்லை.6 மாதத்திற்கு பிறகு முதல் மாணவியாக வந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார். பட்டம் பெற்று வெளியில் வந்து, வேறு பெண்ணை படிக்க வைக்கும் அளவிற்கு வரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தாகவும் தெரிவித்தார். அத்தோடு இதனைத்தொடர்ந்து மணமக்களுக்கு 51 பொருட்களுடன் சீர்வரிசை வழங்கி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement