• May 01 2024

நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்யும் ஹன்சிகா- வருங்கால கணவரின் புகைப்படம் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஹன்சிகாவின் வருங்கால கணவர் பற்றிய முழு விபரம் வெளியாகி ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கும் நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார், அதற்கான ஏற்பாடுகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது என கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்தி வெளியாகி தீயாய் பரவி வந்தது. அது பற்றி ஹன்சிகா எந்த வித விளக்கத்தையும் அளிக்கவில்லை, அந்த செய்தியை மறுக்கவும் இல்லை.



இவ்வாறுஇருக்கையில்  தற்போது டிசம்பர் 4ம் தேதி அவரது திருமணம் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. அவரது வருங்கால கணவர் பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது.

ஹன்சிகா அவரது நீண்ட நாள் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



அத்தோடு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற உள்ளது. இது பற்றிய அறிவிப்பை ஹன்சிகா விரைவில் முறையாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 




Advertisement

Advertisement

Advertisement