• Apr 18 2024

அடுத்தடுத்து மகளின் புகைப்படங்களை பகிரும் அசின்... அழகில் அம்மாவையே மிஞ்சிய பொண்ணு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் மக்கள் பெரிதாக கொண்டாடும் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார்.


அதிலும் குறிப்பாக தமிழில் 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம்' எனப் பல படங்களிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்தார்.

அதுமட்டுமல்லாது ஹிந்தியில் முருகதாஸ் 'கஜினி' படத்தை ரீமேக் செய்ய அப்படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார் அசின். 

இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த அசின் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதன் பிறகு சினிமா பக்கம் தலைகாட்டுவதே இல்லை. இவர்களுக்கு ஆரின் என்ற அழகிய மகள் இருக்கிறார்.


இந்நிலையில் அசின் தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது மகளின் அழகிய புகைப்படம் ஒன்றினைப் பதிவிட்டு இருக்கின்றார். இப்புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement