பாக்கியலட்சுமி சீரியலில் இன்று , கோபி பாக்கியவிடம் வந்து இப்ப உனக்கு சந்தோசமா என்று கேக்கிறார். அதுக்கு செல்வி அக்கா கடுப்பில இருக்கிறது எனக்கே தெரியுது இத்தன வருசமா என்னெண்டு தான் அக்கா கூட வாழ்ந்தாரோ என்று நினைக்கிறாள். பிறகு தான் வீட்ட விட்டு போறதுக்கு முன்னாடி சில விசயங்களை செய்து முடிக்க வேண்டும் என நினைச்சன் அதுக்கு தான் உன்னட்ட 2 மாசம் டைம் கேட்டேன் என்றார்.
பாக்கியா அதுக்கு எனக்கு சந்தோசம் என்று நீங்க பாட்டுக்கு ஒன்னா செய்து முடித்திட்டு போய்டுவீங்க அப்பறமா வார பிரச்சனை எல்லாம் நான் தான் சமாளிக்கணும் என்றார். உடனே கோபி என்ன பிரச்சனை வரும் எனக்கொன்னும் புரியலயே என்கிறார். பிறகு பாக்கியா தண்ணிய எடுத்து குடிச்சிட்டு என் பசங்க என்கூட இருந்தா சந்தோசம் என்று நான் சொன்னானோ என்கிறார்.
அப்பிடியே கொஞ்ச நேரம் கோபிய பாக்கியா பேசிக்கொண்டிருக்காள். அதுக்கு கோபி எதுவுமே கதைக்காம வெளியில போய்ட்டார். பிறகு ஈஸ்வரியும் கோபியும் ஒன்னா சேர்ந்து பாக்கியா பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள். அப்ப ஈஸ்வரி இப்பல்லாம் பாக்கியாவுக்கு யாருமேலயும் பாசமே இல்ல என்கிறார்.
பின் வீட்டில இருக்கிற எல்லாரும் ஒன்னா இருந்து சாப்பிடுறார்கள். அப்ப ஜெனி பாக்கியாட சாப்பாட புகழ்ந்து பேசுறா. பிறகு திடீர் என்று கோபி வந்து இப்படி எல்லாரையும் ஒன்னா பாத்து எவளா காலம் ஆச்சு என்கிறார். பிறகு ஈஸ்வரி குழந்தையைப் பற்றி கதைக்கிறார். அப்ப கோபி ஏன் அம்மா இப்ப இதப் பத்தி கதைக்கிறீங்கள் என்கிறார். உடனே பாக்கியா கோபியை பாத்து முறைக்கிறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!