• May 09 2026

எவ்வளவு கேவலமா பண்ணுறீங்க.! திவாகர் விவகாரத்தில் அறந்தாங்கி நிஷா விளக்கம்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் மாகாபா ஆனந்த் இடையே நடந்த சர்ச்சையில் இப்போது அறந்தாங்கி நிஷாவும் நேரடியாக களமிறங்கியுள்ளார்.

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி செட்டில் நடந்த பிரச்சனையில் மாகாபா ஆனந்த் புகழ் மற்றும் கானா வினோத் மீது திவாகர் குற்றம் சாட்டி இருந்தார் அதற்கு பின்பு மா கா பா ஆனந்த் திவாகர் மீது குற்றம் சாட்டி இருந்தார் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதத்தை ஏற்படுத்தியது

அதிலும் திவாகர் குக் வித் கோமாளியில் போட்டியாளர் ஒருவரின் மனைவி மீது கையை வைத்து தவறாக நடந்தார் என மாகாபா ஆனந்த் குற்றச்சாற்று இருந்தார்

இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் வெளியிட்ட வீடியோவில் நிஷாவின் பழைய வீடியோவை தவறான சூழலில் பயன்படுத்தியதாக திவாகர் குற்றம் சாட்டி அந்த வீடியோ பதிவின் கமெண்ட் பகுதியில் நிஷா எழுதிய பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில் நிஷா, "இந்த வீடியோ நான் ஒரு பெண்ணுக்காக பேசிய வீடியோ. அதை எடுத்து இப்போது போட்டு கேவலப்படுத்தியுள்ளீர்கள். தனக்கு கமெண்ட் செய்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார். 

மேலும், அந்த செட்டில் நடந்த சண்டை கானா வினோத்திற்கும் திவாகருக்கும் இடையே தான் என்றும், அதில் தன் பெயரை சேதப்படுத்துகிறார்கள் என்றும் கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் திவாகர் நிஷாவின் கமெண்டை ஆதாரமாக காட்டி, தான் நிஷாவிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்பதை நிரூபிக்க  முயற்சித்துள்ளார் திவாகர். 

மாகாபா ஆனந்த் கூறியது தவறான தகவல் என்றும்,  அந்த சேனல் நிஷாவின் பெயரை சேதப்படுத்துவதாகவும் திவாகர் தொடர்ந்து குற்றம் சாட்டி  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement