• May 19 2024

கில்லி படத்தை பார்த்து பேயாட்டம் ஆடிய பெண்கள்! அதுக்குன்னு இப்படியா? வைரல் வீடியோ

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் வரவேற்பை பெறாத நிலையில், மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளில் வெளியான திரைப்படங்கள் பட்டைய கிளப்பி வருகின்றன.

இதன் காரணமாக தியேட்டர்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து வருகின்றார்கள். அதன்படி தற்போது விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.

இவ்வாறு கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் வெளியான கில்லி  திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இதன் முதல் நாள் வசூல் மட்டுமே 7 கோடியை கடந்துள்ளது.


இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து வெளியான விஜய் படத்தை பார்த்த இளம் பெண்கள் தியேட்டரில் பேயாட்டம் ஆடியுள்ளனர். இதை பார்த்த விஜய் ரசிகர்களே ஷாக் ஆகி உள்ளனர்.

அதாவது கில்லி படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வரும் நிலையில், விஜய் தற்போது நடிக்கும் கோட் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தளபதி விஜய் மீதுள்ள கிரஷில் தியேட்டருக்கு சென்ற பெண்களில் சிலர், அப்படத்தில் போகும் பாட்டிற்கும், டயலாக்கிற்கும் குத்தாட்டம் போட்டுள்ளனர். தற்போது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement