• Apr 28 2024

தவறான கேள்விக்கு கூலாக பதில் சொன்ன கௌதம் மேனன்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்திலும் சிம்பு நடிப்பிலும் சமீபத்தில் ரிலீஸான வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது. சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சேரும் போது இந்த மேஜிக் நிச்சயம் நடக்குமென ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

கௌதம் மேனன் இந்த பட ப்ரோமோஷனுக்காக தெலுங்கு சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது இணையத்தளத்தில்  வைரலாகி வருகிறது.

கௌதம் மேனன் தான் செக்க சிவந்த வானம் படத்தை இயக்கியவர் என நினைத்துக்கொண்டு அந்த தயாரிப்பாளர் கெளதம் மேனனிடம் 'மூன்று நான்கு கதாநாயகர்களை வைத்து படம் எடுப்பது எவ்ளோ கஷ்டமாக இருந்தது' என கேள்வி கேட்கிறார்.

மேலும் அந்த படத்தை நான் இயக்கவில்லை என கௌதம் விளக்கம் சொல்வார் என பார்த்தால், அவர் 'நான் தான் மணிரத்னம், நான் படம் எடுத்தால் கதாநாயகர்கள் கரெக்ட்டாக வந்துடுவாங்க' என sarcastic ஆக பதில் கொடுத்து இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது ட்ரோல் கன்டென்ட் ஆகவும் மாறிவிட்டது. 



Advertisement

Advertisement

Advertisement