• Apr 26 2024

பத்து தல படம் குறித்து கௌதம் கார்த்திக் கொடுத்த சூப்பர் அப்டேட்- என்னோட வேலை எல்லாமே ஒழுங்கா பண்ணிட்டேன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பத்து தல. இப்படத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வருவதோடு சிம்புவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில்  கௌதம் மேனன்,  பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 


கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர்.


இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கௌதம் கார்த்திக் 'பத்து தல' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை புகைப்படங்களை வெளியிட்டு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement