• Sep 30 2023

திருமணத்திற்குப் பின் வந்த கௌதம் கார்த்திக்கின் முதல் பிறந்தநாள்... சர்ப்ரைஸ் கொடுத்த மஞ்சிமா மோகன்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீசான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 


இப்படத்தில் அவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கும், மஞ்சிமா மோகனுக்கு இடையே காதல் மலர்ந்தது.


இதையடுத்து மூன்று ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடி, கடந்தாண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் இன்றைய தினம் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


திருமணத்திற்கு பிறகு வரும் கௌதம் கார்த்திக்கின் முதல் பிறந்தநாள் என்பதால் மனைவி மஞ்சிமா மோகன் தனது சந்தோஷத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கௌதம் கார்த்திக் கைகளை கோர்த்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றினைப் பதிவிட்டு அதில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர். நீ என் வலிமையின் தூண், என் நம்பிக்கைக்குரியவன், என் ஆத்ம தோழன், என் இரட்டைச் சுடர், மற்றும் பல, இந்த வாழ்க்கை பயணத்தில் நான் உன் அருகிலேயே இருப்பேன், உன் கையை இறுகப் பிடித்துக்கொண்டு உன்னை ஒருபோதும் விழ விடமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்" எனக் காதல் ததும்ப பதிவிட்டு சப்பிரைஸ் கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement