• Jan 15 2025

16 வயது இளைஞனை போல மாறிய கௌதம் கார்த்திக்.. தடுமாறும் பேன்ஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் கௌதம் கார்த்திக். இவர் பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் ஆவார்.

கௌதம் கார்த்திக் நடித்த கடல் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜுன், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை , இந்திரஜித் போன்ற பல படங்களில் நடித்தார். மேலும் தேவராட்டம், 1947 போன்ற படங்களிலும் நடித்து தனது திறமை வெளிகாட்டி இருந்தார்.


2022 ஆம் ஆண்டு மஞ்சுமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கௌதம் கார்த்திக்.

இந்த நிலையில் தற்போது மிகவும் இளமையான தோற்றத்தில் புதிய போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கௌதம் கார்த்திக். தற்போது இதை பார்த்த ரசிகர்கள் இது அவரா இல்ல அவரைப் போல வேறு ஒரு நபரா என தடுமாறி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement