• Jan 19 2025

அம்மன் உணவகத்தின் மற்றொரு கிளை புதிதாக திறப்பு! சூரியின் அசுர வளர்ச்சிக்கு பலரும் வாழ்த்து

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இதுவரை காலமும் காமெடியனாக கலக்கி வந்த நடிகர் சூரி தற்போது அசுர வேகத்தில் நடிகராக திகழ்ந்து வருகின்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, அந்த படத்தில் நடிப்பதற்காக சூரி எடுத்த அத்தனை முயற்சிகளும் பலராலும் வியக்கும் வகையில் அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் படத்தில் நடித்த சூரி, முற்றிலும் மாறுபட்ட ரீதியில் எடுத்த புதிய அவதாரத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ஏழுமலை ஏழு கடல், கொட்டுக்காளி, விடுதலை 2 ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார் நடிகர் சூரி. அது மட்டுமில்லாமல் இன்று எட்டு கோடிக்கு சம்பளம் வாங்கும் நடிகராகவும் உயர்ந்துள்ளார்.


இந்த நிலையில், நடிகர் சூரி நடத்தும் அம்மன் ஹோட்டலின் மற்றொரு கிளையை மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் புதிதாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு நடிகர் சூரியின் வளர்ச்சிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement