• May 07 2024

அம்பானி வீட்டில் நடந்த விசேஷம்... ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை குவிந்த பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

உலகப் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அம்பானி. இவருடைய வீட்டில் நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 


அதாவது சூரிய உதயத்தின் போது வரும் சதுர்த்தி திதி நாள் தான் விநாயகர் சதுர்த்தி என்பதால் நேற்றைய தினம் இதனை வெகு விமரிசையாக கொண்டாடினர்.


அம்பானி வீட்டில் இடம்பெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


அந்தவகையில் ஷாரூக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி, ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், மௌனி ராய், திஷா பதானி, அனில் கபூர், ஹேமமாலினி, அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனா, ரேகா, கியாரா அத்வானி, சித்தார்த் மல்கோத்ரா, விக்கி கௌஷல், அஜய் தேவ்கன், ரோகித் ஷெட்டி, ஷ்ரத்தா கபூர், உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 


அதேபோன்று தமிழ் சினிமா பிரபலங்களான இயக்குநர் அட்லி - நடிகை ப்ரியா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement