• May 19 2024

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் விமர்சனம்-என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் தனுஷ் ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் இவர் கோலிவுட்டில் கடந்த ஓராண்டாக சறுக்கலை தான் சந்தித்து உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ் படங்களான ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் அவரது கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படங்களாக இவருக்கு அமைந்துவிட்டது. இந்த இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்ட படங்களாகும்.

இதனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தனுஷ்.மேலும்  அவர் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்பவராக நடித்து இருக்கிறார். 

அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடிக்க, தோழியாக நித்யாமேனன்  என பலர் நடித்துள்ளார்.திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் Review அப்படத்தின் விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் திருச்சிற்றம்பலம் நல்ல குடும்ப திரைப்படம் என்றும் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சிறப்பாக நடித்துள்ளனர் என மூன்று ஸ்டார்களை கொடுத்திருக்கிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தின் Pre-show கிடையாது, நாளை தான் இப்படம் உலகளவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இந்த நபர் இப்படி தவறான விமர்சனத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு தனுஷ் ரசிகர்கள் பலரும் இது தவறான விமர்சனம் என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சொல்லிவருகின்றனர்.  




Advertisement

Advertisement