• May 12 2024

ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் நட்சத்திர நாயகனாக தோன்றி ரசிகர்களால் 'பாலிவுட்டின் பாட்ஷா', 'கிங் கான்', கிங் ஆஃப் ரொமான்ஸ்' என வர்ணிக்கப்படுபவரே நடிகர் ஷாருக்கான்.

இவர் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாக திரை முன் தோன்றி, படிப்படியாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு பாலிவுட்டில் கதாநாயகனாக கால் பதித்தவர்.

பாலிவுட் சினிமாவில் 1992-ஆம் ஆண்டில் 'டர்' என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமாகி தொடர்ந்து தனது நடிப்புத் திறமையின் மூலமாக ஹீரோ என்ற அந்தஸ்த்தைக் கைப்பற்றியவர்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த இவருக்கு, 2013-ஆம் ஆண்டு 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படமும், 2014-ஆம் ஆண்டு 'ஹாப்பி நியூ இயர்' என்ற படமும், 2015-ஆம் ஆண்டு 'தில்வாலே' படமும் தொடர் வெற்றியை பெற்றுக் கொடுத்தன.

இவ்வாறு தொடர் வெற்றிகளால் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு 'ரயில், பேன், ஜீரோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை பெற்றுக் கொடுத்தன. இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.

எனினும் தற்போது மறுபடியும் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றார். இந்நிலையில் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கின்றார்.

இந்நிலையில் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைவதனை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதனை பார்த்த ரசிகர்கள் இப்போஸ்டரை தமது சமூக வலைத்தளங்களிலும் ஷேர் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement