• Sep 30 2023

முதல் பாதி பிளாக் பஸ்டர் 2வது பஃயர்- ஜெயிலர் படத்தின் டுவிட்டர் விமர்சனம்- என்ன சொல்லியிருக்கிறாங்க தெரியுமா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

 ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்துள்ளது. வெளிநாடுகளிலும், மற்ற மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் தீபாவளியை இப்பவே கொண்டாடி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கி உள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், விடிவி கணேஷ், சுனில், ரெடின் கிங்ஸ்லி, ரித்து ராக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படம் முதல் நாளிலேயே  ரூ.100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தமது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது ஜெயிலர் படத்தின் முதல் பாதி பிளாக் பஸ்டர் 2வது பஃயர், ஒட்டுமொத்தத்தில் பிளாக்பஸ்டர் திரைப்படம், அனிரூத் பிஜிஎம் வேறலெவல், படம் நிச்சயம் மிகப்பெரிய வசூலை பெரும் என பதிவிட்டுள்ளார்.


மற்றொரு ரசிகர் ஜெயிலர் படத்திற்கு 4.25/5 ரேட்டிங் கொடுத்துள்ளார். தலைவரின் இன்ரோ சீனி, அனிரூத்தின் பிஜிஎம், யோகிபாபுவின் காமெடி திரையில் அனல் தெறிக்கிறது. பாடல்கள், பேமிலி செண்ட்டிமென்ட் என அனைத்தும் சூப்பர் என பதிவிட்டுள்ளார்.இதனால் நெல்சன் தரமான சம்பவம் செய்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement