• May 03 2024

பிரபல தயாரிப்பாளர் மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாகவே அடுத்தடுத்து பல திடீர் உயிரிழப்புக்கள் இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் தற்போது மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.


அதாவது 'ஒரு மே மாசப்புலரியில்' என்ற படத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவரான பைஜு பணிக்கர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.


இந்தத் தகவலானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது. இந்நிலையில் இவரின் உடல் அஞ்சலிக்காக திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இவரின் இறப்பிற்குப் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement