• Oct 09 2024

திடீரென 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலில் இருந்து விலகிய நடிகை... இனி அவருக்குப் பதில் இவர்தான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவை விட தற்போது சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து பல டிவி சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல்களை தொடங்கி வருகின்றன. எத்தனை எத்தனை சீரியல்கள் வந்தாலும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 


அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் குறுகிய காலத்தில் வலிமையான ஒரு இடத்தைப் பிடித்த சீரியல் தான் 'மீனாட்சி பொண்ணுங்க'. 4 பெண் குழந்தைகளுடன் ஒரு பெண் தனிமையில் வாழும்போது சந்திக்கும் முக்கிய பிரச்னைகளை மையமாக கொண்டு இந்த சீரியல் அமைந்துள்ளது.

இதில் மீனாட்சியின் மூத்த மகள் யமுனாவாக நடிகை காயத்ரி நடித்து வருகிறார். ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆகி தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். 


இந்நிலையில் தற்போது 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலிலிருந்து நடிகை காயத்ரி வெளியேற உள்ளார். இதனையடுத்து இவருக்குப் பதிலாக யமுனா கதாபாத்திரத்தில் நடிகை காவ்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement