நடிகை சமந்தா, விஜய் தேர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் தான் குஷி. இப்படத்தினை இயக்குந் ஷஜவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.
இந்த படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்க அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில், விஜய் தேவர் கொண்டா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான காதல் கதயம்சத்தைக் கொண்ட இந்தப் படமானது இளைஞர், யுவதிகளை அதிகம் கவர்ந்துள்ளது.
இதனால் இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அதிகளவில் பெற்றுள்ளது. இதனையடுத்து வசூலும் எகிறியுள்ளது. அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படம் முதல் 3 நாட்களில் மட்டும் ரூ. 70 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருந்தது.
இவ்வாறாக எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை குஷி படம் பெற்றுள்ளதால் நடிகர் விஜய் தேவரகொண்டா சூப்பரான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்தவகையில் இது குறித்து அவர் கூறுகையில் "குஷி படத்தின் தனது சம்பளத்தில் இருந்து 1 கோடியை 100 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமாக பிரித்து வழங்குவேன், அதாவது பொருளாதார தேவையுள்ள 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்த 10 நாட்களில் தலா ரூ. 1 லட்சம் காசோலையாக வழங்குவேன்" எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் "எனது வெற்றி, மகிழ்ச்சி, சம்பளம் என அனைத்தும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். எனவே இன்றைய தினம் எனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு படிவத்தைப் பகிர்கிறேன். இந்த படிவத்திற்கு 'மகிழ்ச்சி பரவட்டும்' அல்லது 'தேவேரா குடும்பம்' என்று பெயரிட்டு இருக்கும். இந்த பணம் மக்கள் தங்கள் வாடகை அல்லது கட்டணம் என எதற்காகவாது உதவினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இதன் வாயிலாக குஷி படத்தின் வெற்றியை நான் உண்மையிலேயே அனுபவிக்க முடியும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்தப் பெருந்தன்மையைப் பாராட்டிப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவி
Listen News!