• Jul 28 2026

17 இரவுகள் தூங்காமல் உழைத்த விஷால்.. எல்லாம் இதற்காகத் தானா? வெளியான தகவல்கள்...

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடித்திருக்க, நடிகை அஞ்சலி முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுவதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பு காலத்தில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் மாற்றத்தை சந்தித்தது. அதன் பின்னர் படத்தின் இயக்க பொறுப்பை நடிகர் விஷால் தானே ஏற்றுக்கொண்டார். 


இதுகுறித்து அவர் கடந்த தீபாவளி நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், “கதை ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்தது.

இந்நிலையில், ‘மகுடம்’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ரைஸ் ஆப் லிங்கா’ என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடல் வரும் 16-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதுடன், பாடலை எதிர்நோக்கும் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது.

Advertisement

Advertisement