• May 05 2024

தி கிரே மேன் புரோமோ வீடியோவில் தனுஷ் இல்லாததால் ஏமாந்து போன ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் தான் தி கிரே மேன். அமரிக்க படமான இத்திரைப்படம் வரும் ஜுலை மாதம் 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை பிரமாண்ட பொருட் செலவில் நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ளது

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அசத்தல் இசையுடன் உருவாகிய இப்படத்தின் ப்ரோமோ இன்று வெளியானது. இந்த படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் இருக்கிறாரா என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் இந்த ப்ரொமோ வீடியோவை ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.

ஆனால் அந்த வீடியோவில் தனுஷ் இல்லாதது வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், படத்தின் ரிலீசிற்காக காத்திருப்பதாக ரசிகர்கள் பலர் வேதனையுடன் கமெண்ட் செய்திருக்கின்றனர். எல்லா தியேட்டர்லையும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதா, எங்க ஹாலிவுட் ஹீரோ எங்கப்பா ப்ரோமோவில் என ரசிகர்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் தான் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement